தேவதை போல பாட்டு பாடிக் கொண்டே என்ட்ரி கொடுத்த மருமகள்… எமோஷனலான அம்பானியும் அவரது மனைவியும்… வைரலாகும் வீடியோ…

By Begam on பங்குனி 4, 2024

Spread the love

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட திருமண விழாவிற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்தது.

   

மார்ச் 1 முதல் 3 வரை திருமணத்திற்கு முன்பு நடைபெறும் இந்த கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இதில் வணிக மற்றும் தொழில்நுட்ப உலகின் முன்னணி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

   

 

பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, இந்திய பிரபலங்கள், உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த , இந்த விழாவில் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் பாட்டு பாடிக் கொண்டே நடந்து  வர, இதைப்பார்த்த முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் எமோஷனலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…