தன் மகனின் திருமண விழாவில் ட்ரடிஷனல் உடையில் நடனமாடி  காண்போரை பிரமிக்க வைத்த முகேஷ் அம்பானி மனைவி… கண்கவரும் வீடியோ… 

By Begam on பங்குனி 4, 2024

Spread the love

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீத்தா தம்பதியின் இளைய மகன் ஆனந்துக்கும், ராதிகா மெர்சென்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருவிழா போன்று திருமண நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடக்கும் இந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

குஜராத் ஜாம்நகரில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர். அதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப், பூட்டான் மன்னர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், ராம் சரண் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், அமீர்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

   

 

மேலும், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட், சாம் கரன், சாய்னா நேவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது மகனின் திருமண விழாவில் நீட்டா அம்பானி ட்ரடிஷனல் உடையில் நடனமாடி காண்போரை வியக்க வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு  வருகிறது. இதோ அந்த வீடியோ…