தமிழ் சினிமாவில் முதன் முதலில் 100 படங்களில் நடித்து சாதனைப் படைத்தது இந்த தம்பதிகள் தான்..

By vinoth on பங்குனி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகள் வரை காமெடி டிராக் என்பது ஒரு கமர்ஷியல் படத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது. அதற்கு வித்திட்டவர் என் எஸ் கிருஷ்ணன்தான்.

   

இவர் தன்னுடைய மனைவி மதுரத்துடன் இணைந்து முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை கலந்து தான் நடிக்கும் படங்களில் கூறிவந்தார். இதனால் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்றே ஒரு தனிக்கூட்டம் அந்த காலத்தில் உருவானது. இதனால் அதிகளவிலான படங்களில் இருவரும் நடித்தனர்.

   

தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். ஆனால் எதிர்பாராத விதமாக கலைவாணர் என் எஸ் கே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றதால் அவரின் நடிப்புக்கு இடைவெளி விழுந்தது. ஆனால் அந்த வழக்கில் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 

அதன் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்தார். ஆனால் 1957 ஆகஸ்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்  மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி தனது 49 ஆவது வயதிலேயே உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலம் சென்னையில் நடந்த போது அதில லட்சக் கணக்கானவர்கள் கலந்துகொண்டனர் என சொல்லப்படுகிறது.

கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.  சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார்.