ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தை சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மதராஸி திரைப்படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத் இது நானும் சிவகார்த்திகேயனும் இணையும் எட்டாவது திரைப்படம் என கூறியிருந்தார். இதற்கு முன்பு மான் கராத்தே, எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் என சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹிட் படங்களுக்கு அனிருத் இசைமைத்துள்ளார்.
அந்த வரிசையில் தற்போது மதராஸி படமும் இணைந்துள்ளது. கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனும் அனிருதும் ஒரே நேரத்தில் தான் திரை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது இருவரும் தங்களது திறமையால் திரை உலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
