தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் என்பவரும், திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.
