. திருச்சி துறையூரில் இபிஎஸ் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, நாளை போராட்டம் நடைபெறும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டத்தில் ஆம்புலன்ஸை தடுத்து அதன் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக நகர செயலாளர் பாலு உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
