நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பல்வேறு காரணங்களால் வனிதாவால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் மீண்டும் பிரபலமானார். வனிதா விஜயகுமார் தனது மகள் தயாரிப்பில் உருவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவர்கள் ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தில் சகிலா, ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தோல்வி அடைந்தது. இந்த படத்தை ஓடிடியில் வாங்க யாரும் முன் வரவில்லை.
இதனால் வனிதா விஜயகுமார் தனது சொந்த யூடியூப் சேனலில் கட்டண சந்தா மூலம் படத்தை வெளியிட்டார். தற்போது இந்த படத்தை இலவசமாக பார்க்கலாம். அப்படி இரண்டு நாட்கள் மட்டும் சுமார் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படத்தை பார்த்துள்ளனர்.
