ரயில்வேயின் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘ரயில் ஒன்’ செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளைப் பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணத் தள்ளுபடிச் சலுகையை 2027-ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செயலியின் வாயிலாகச் சாதாரண பயணச்சீட்டுகள், முன்பதிவு டிக்கெட்டுகள், நடைமேடை அனுமதிச் சீட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளைச் சிரமமின்றிப் பெற முடியும். அத்துடன் ரயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் குறைகளைப் பதிவிடும் வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பணமில்லா மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சலுகையை யு.பி.ஐ (UPI), டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது இணைய வங்கி மூலமாகக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ‘ஆர்-வாலட்’ (R-Wallet) முறையில் டிக்கெட் எடுப்பவர்களுக்கான 3 சதவீத கேஷ்பேக் சலுகை 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தவும் இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…
கேரளா காவல் துறை சமூக வலைதளங்களில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து…
மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா என்பவரிடம், ஓட்டுநராகப் பணிபுரியும் நோயாளி ஒருவர் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளார்.…
சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வரும் சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை…
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின்…