கேரளா காவல் துறை சமூக வலைதளங்களில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலாண்ட் தொடர்பான வைரல் மீமைப் பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஹாலாண்ட் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது போன்ற செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்த காவல் துறை, இணையத்தில் புகழ்பெற்ற “நைஸ்” மீம் பாணியில் நகைச்சுவையான விளக்கக் குறிப்பையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளது.
பிரபல விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு தருணங்களை வைத்து விழிப்புணர்வு பரப்புவது கேரளா காவல் துறைக்கு முதன்முறையல்ல. இதற்கு முன்பும் கிரிக்கெட் வீரர் சல்மான் நிசாரின் ஹெல்மெட் சம்பவத்தைப் பயன்படுத்தித் தலைக்கவச விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹாலாண்டின் மீமை வைத்து அவர்கள் உருவாக்கியுள்ள இந்தப் புதுமையான பதிவு இணையவாசிகளிடையே பெருமளவில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஆணைகளை ரத்து செய்து, திட்டங்களின்…
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…