‘ஜனநாயகன்’ ரிலீஸில்… “காசு வேண்டாம் சார்…”ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தல சுற்ற வைக்கும் த.வெ.க-வின் மாஸ் பிளான்… அதிர்ச்சியில் ஹோலிவுட்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. சென்சார் சான்றிதழ் சிக்கல்கள் கடந்து திரைக்கு வந்துள்ள இப்படத்தை விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில், மயிலாடுதுறையில் த.வெ.க சார்பில் பொதுமக்களுக்கு டிக்கெட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள சாலையோரச் சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகள் நேரில் சென்று இலவசமாக விநியோகிக்கப்பட்டன. அங்குள்ள விஜயா மற்றும் கோமதி எல்.ஏ திரையரங்குகளில் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விநியோகத்தின் போது, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி த.வெ.க-வினர் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி தணிக்கைச் வாரியத்தின் ‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களை மட்டும் குறிவைக்காமல், உழைக்கும் எளிய மக்களும் விஜய்யின் கடைசித் திரைப்படத்தைக் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட் வழங்கிய மயிலாடுதுறை த.வெ.க-வினரின் இந்த மனிதநேய முயற்சி பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

Visaka

Recent Posts

திடீரென ரத்தாகும் ஆயிரக்கணக்கான டெண்டர்கள்… விஜய் ஒரே முடிவில் ஆடிப்போன அரசு இயந்திரம்…. பகீர் கிளப்பும் பின்னணி உண்மை…!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஆணைகளை ரத்து செய்து, திட்டங்களின்…

3 minutes ago

‘ஜனநாயகன்’ பார்த்து அழுத தவெக அமைச்சர்…! கலாய்த்துத் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்… சோசியல் மீடியாவில் வெடித்த புதிய சர்ச்சை…!!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…

30 minutes ago

தினமும் பல கோடி வருமானம்… “இனி அது கிடையாது… புது ரூல்ஸ் வந்தாச்சு…” டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…

37 minutes ago

“ஒரு மெசேஜ் போதும்.. வேலை காலி”…. லஞ்ச அதிகாரிகளுக்கு விஜய் போட்ட மாஸ் செக்… மாட்டிய உளவுத்துறை லிஸ்ட்.. கதறும் உயர் அதிகாரிகள்…!

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…

39 minutes ago

“பறந்து வந்த ரயில்… தண்டவாளத்தில் பாய்ந்த தந்தை…” குழந்தையை காப்பாற்ற நொடி பொழுதில் எடுத்த தைரியமான முடிவு… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!

ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…

40 minutes ago

“அன்புமணிக்கு விழுந்த பலத்த அடி”… விஜய் அமைச்சர்களின் ரகசிய ஆபரேஷன்….. பாமகவை அதிரவைத்த அருளின் அடுத்த மூவ்… ஜான் ஆரோக்கியசாமியின் செக்மேட்..!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…

47 minutes ago