சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை இந்த சீரியலில் நடிச்சிட்டு இருக்கங்களா?… அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

By Nanthini on பங்குனி 27, 2025

Spread the love

பிரபல நடிகரான முரளி நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ராதா ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ராதாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டார்.

சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையை நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Sundhara Travels Actress Radha Latest Photo

   

ராதாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராதா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதனை தொடர்ந்து எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த வசந்த ராஜன் என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

   

Gallery

 

ஆனாலும் ராதா வசந்த ராஜனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்குள் அவரை விட்டு பிரிந்து விட்டார். மேலும் தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்துவதாகவும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு அவரே அந்த புகாரை வாபஸ் செய்து விட்டார்.

சீரியலில் கதாநாயகனாகும் சினேகன்.. அவருக்கு ஜோடி விஜய் டிவி பிரபலம்.. இந்த  சேனலில் தான்! | Lyricist Snekan and Actress Anitha Sampath to Debut in Pavithra  Serial - Tamil Oneindia

நீண்ட இடைவெளிக்கு பிறகு பைரவி சீரியலில் ராதா நடித்தார். பின்னர் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்தார் அதன் பிறகு அவரை திரையில் பார்க்க முடியவில்லை. தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சுந்தரா ட்ராவல்ஸ் பட  நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.