அந்த விஷயம் என் வாழ்க்கையை புரட்டி போட்டுச்சு.. 4 மாசமா வீட்டை விட்டு வெளியே கூட வரல.. நடிகர் ஷாம் எமோஷனல்..!

By Nanthini on பங்குனி 27, 2025

Spread the love

ஷாம் தமிழ்நாட்டின் மதுரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பெங்களூரில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் மாடலிங்கில் இறங்கினார். இவரின் இயற்பெயர் ஷம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். ஷாம் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங் செய்தார். மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார் ஷாம். 1999 ஆம் ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஷாம் நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. 12B படத்திற்கு நடிப்பதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஷாம்.

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் ஷாம் | Actor Shaam teams up with director  Vijay Milton - hindutamil.in

   

தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பிற்கான பாராட்டினை பெற்றார் ஷாம். உள்ளம் கேட்குமே படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. 2000 களின் நடுப்பகுதியில் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத ஷாம் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக முடிவெடுத்தார். ̣அதன்படி தில்லாலங்கடி, அகம்புறம், ஒரு மெல்லிய கோடு, பொய் கால் குதிரை போன்ற படங்களில் நடித்த ஷியாம் அடுத்தடுத்து வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்கிறார்.

   

Jeeva - அவரைப் போல் இருந்திருந்தால் வாழ்க்கையை என்ஜாய் செய்திருப்பேன்..  இயக்குநர் ஜீவா ஷேரிங்ஸ் | Cinematographer and director Jeeva's 16th  Memorial day All Details You Should ...

 

இறுதியாக விஜையுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ள ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  நான் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆக்சன் படங்களில் நடிக்கலாம் என அடுத்த கட்டத்திற்கு முன்னேறினேன். அப்போது மறைந்த இயக்குனர் ஜீவா சார் ரஷ்யாவில் இருந்து எனக்கு போன் பண்ணி நம்ப ஒரு ஆக்ஷன் படம் பண்ணலாம் எந்த படத்தலையும் கமிட் ஆகிறதா என்று என்கிட்ட சொன்னாரு.

Asthram: 'நான் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட், ஆனா..' - நடிகர்  ஷாம் பேசியதென்ன? |actor shaam talks about sivakarthikeyan - Vikatan

உன்னை ஒரு ஆக்சன் ரோலில் நான் சினிமாவுக்கு காட்ட போறேன் கதையெல்லாம் ரெடியா இருக்கு வேற எந்த படத்தில்யும் கமிட் ஆக வேண்டாம் என்று சொன்னாரு. நானும் அடுத்த லெவலுக்கு முன்னேற போறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜீவா சார் இறந்து விட்டார். அந்த நாட்கள் தான் என்னுடைய வாழ்க்கையிலேயே இருண்ட நாட்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அதிர்ச்சியில் இருந்ததால் நான் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. படத்துல நடிக்கும் போது கூட…