மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?.. வெளியானது முழு விமர்சனம்..!

By Nanthini on பங்குனி 27, 2025

Spread the love

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பான் இந்தியா திரைப்படம் தான் எம்புரான். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளத்தில் உருவான பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த திரைப்படம் உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அரசியல் பிமல் நாயர் இல்லாததால் ஜென்டின் ராம் தாஸின் ஆட்சி நடக்கின்றது. முதல்வர் என்ற முறையில் 5 வருடங்களை நிறைவு செய்யும் ஜெட்டின், தந்தையின் பாதையில் இருந்து ஒரு மாற்றத்தை செய்ய தயாராகின்றார்.

L2 Empuraan X Review: யாருப்பா அந்த டிராகன்?.. மோகன்லாலின் எம்புரான் பட  ட்விட்டர் விமர்சனம் இதோ! | L2 Empuraan X Review in Tamil: Mohanlal and  Prithviraj done a powerfull mass blockbuster ...

   

இதில் சகோதரி பிரியதர்ஷினிக்கு உடன்பாடு இல்லை. ஜெட்டினை வாழ்த்திய பின்னர் கேரளாவை விட்டுச் சென்ற ஸ்டீபன் நெடுப்பள்ளி திரும்ப வர வேண்டும் என்று அவர்கள் அனைவரும் விருப்பம் கொள்கிறார்கள். ஆனால் கேரளாவில் இருந்து மறைந்த ஸ்டீபன் நெடும்பள்ளி, அப்புறம் குரேஷி என்ற நிழலுலக தாதாவாக உலக அளவில் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதையாகும். லூசிபர் படத்தின் பார்த்த அதே பாணியில் கதாபாத்திரங்கள் அமைந்துள்ள நிலையில் திரைக்கதைக்கு மேற்கு பிரித்விராஜ் தனது மேக்கிங் திறமையை அற்புதமாக காட்டியுள்ளார்.

   

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மோகன்லாலின் எம்புரான்.. இதுவரை இத்தனை கோடி  வசூலா

 

ப்ரோமோஷன் என்று சொன்னால் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பல காட்சிகள் படத்தின் பட்ஜெட்டுக்கு பலம் சேர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக மோகன்லால் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் வீரியத்தை கூட்ட ஒரு கள அமைப்பாக பணத்தின் முதல் பாதி அமைந்துள்ளது. அதனைப் போலவே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி கதைக்குள் செல்லும் முறையையும் இயக்குனர் திரைப்படத்தில் அற்புதமாக காட்டியுள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் கலெக்‌ஷன் எல்லாம் தவிடுபொடி ஆகப்போகுது.. எம்புரான் முதல்  நாள் வசூல் விவரம்! | Mohanlal PRITHVIRAJ Sukumaran Empuraan Movie First Day  Collection More Than 50 ...

மோகன்லால் ஷோ என்று சொல்லக்கூடிய அதிரடி காட்சிகள் திரைப்படத்தில் நிறைந்துள்ளது. அதில் குறிப்பாக இடைவேளைக்கு பிறகு நெடும்பள்ளி காட்டில் நடக்கக்கூடிய காட்சிகள் உண்மையிலேயே அற்புதமாக உள்ளன. மோகன்லால் தவிர மஞ்சுவாரியார் முக்கிய வேடத்தில் வரும் காட்சியும் திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டளை பெறுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் திரைப்படம் அற்புதமாக அமைந்துள்ள நிலையில் ஒளிப்பதிவு மற்றும் இசை என அனைத்துமே சிறப்பாக படத்திற்கு மேலும் பலம் சேர்கிறது. மொத்தத்தில் திரைப்படம் அதிரடியாக உள்ளது.