ஆர் ஜே வாக இருந்த பாலாஜி சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து கேரக்டர் நூல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் நடித்த பேட்டியில், எல்லா படங்களில் நடிக்கும் போதும் நமக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும். அப்படிதான் நான் மணிரத்னம் சார் படத்தில் கமிட்டான கையோட ஏஆர் முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு. நானும் என் பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் ஜாலியா சொல்லிட்டு ஏ ஆர் முருகதாஸ் படத்துல நடிக்க போறோம் என்ற சந்தோஷத்தோடு இருந்தேன். அவரோட படத்துல ஹீரோவுக்கு தனி ஒரு மாஸ் இருக்கும் அதுபோல வில்லனுக்கும் தனி ஒரு மாஸ் இருக்கும்.

நான் ஸ்பைடர் படத்துல நடிக்க கிட்டத்தட்ட 70 நாள் ஷூட்டிங் போனேன். ஆனால் அதுல 40 நாளுக்கு மேல சும்மா கை கட்டிக்கிட்டு தான் இருந்தேன். உண்மையிலேயே அதை என்னைக்குமே என்னால மறக்க முடியாது. ஐபிஎல் க்கு போயிருந்தா கூட எனக்கு புடிச்ச மாதிரி அந்த வேலையை பார்த்துட்டு பணம் சம்பாதிச்சிட்டு வந்து இருப்பேன். ஆனால் இந்த படத்துல நடிக்க போய் சும்மா கை கட்டிக்கிட்டு நின்னுட்டு தான் இருந்தேன். இருந்தாலும் அவர் படத்துல நடிச்சதுல எனக்கு சில அனுபவங்கள் கிடைத்தது. அந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் நான் படத்துல நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டேன் என்று ஆர் ஜே பாலாஜி பேசியுள்ளார்.
