எனக்கும் திருமண ஆசை இருந்துச்சு… நான் பண்ண தப்பு என் குடும்பத்துக்காக.. மனம் திறந்த ஷகீலா!

By vinoth on பங்குனி 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.

மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார். அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின.

   

ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.

   

மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது.

 

ஷகீலா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மலையாளப் படங்களில் நடித்து கோடிகளில் சம்பாதித்த ஷகீலாவிடம் இப்போது பெரிதாக சொத்து எதுவும் இல்லை. அவரை சுற்றியிருந்தவர்கள் அவரை ஏமாற்றி பணத்தை சுருட்டிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷகீலா தனக்கும் திருமண ஆசை இருந்தது எனக் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “எல்லாரப் போலவும் எனக்கும் திருமண ஆசை இருந்தது. ஆனால் வந்தவன் எல்லாம் சில வருஷங்கள் என்னோடு இருந்துவிட்டு ஓடிவிட்டான்கள். நான் பண்ண ஒரே தப்பு என் குடும்பத்த பத்தி நான் நிறைய யோசிச்சதுதான். அதனாலேயே நான் நிறையப் பேரை இழந்தேன்” எனக் கூறியுள்ளார்.