இயக்குனர் சுந்தர் சி திருமணத்திற்கு முன்பு குஷ்பூ சொன்ன விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பல கமர்சியல் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. 90ஸ் காலகட்டத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக பயணித்து வருகின்றார். இயக்கம் மட்டும் இல்லாமல் ஒரு காலகட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இந்த திரைப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சுந்தர் சி ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் ஹிப்பாப் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார் சுந்தர் சி. மேலும் சமீபத்தில் ஒன் அண்ட் ஒன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
நடிகர் சுந்தர் சி யின் மனைவி குஷ்பூ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். நைட்டீஸ் காலகட்டத்தில் டாப் நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர் இவர். இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி தனது மனைவி குஷ்பூவை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது திருமணத்திற்கு முன்பு குஷ்பூ சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதை பார்க்க முடிந்தது. அப்போது ஒரு மருத்துவர் இவருக்கு குழந்தையை பிறக்காது என்று கூறிவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குஷ்பூ நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அழுது கொண்டே கூறினார்.
ஆனால் நான் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எனக்கு நன்றாக தெரியும். என் வாழ்க்கையில் குழந்தை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராக இருந்தேன் . ஆனால் கடவுள் எங்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுத்து விட்டார். எங்களிடம் தற்போது ஒன்றல்ல இரண்டு தேவதூதர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் .மேலும் முதல் குழந்தை அவந்திகா பிறந்தது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் .
பிரசவத்திற்கு பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தின் போது தான் குஷ்பூ தனது சுயநினைவியே அடைந்தார். மேலும் நாங்கள் 5 வருடம் டேட்டிங்கில் இருந்தும், பலமுறை எங்களுக்கு சண்டை வந்து இருக்கின்றது. பலமுறை மீடியாக்களிலேயே நாங்கள் பிரிந்து விட்டதாக எழுதி இருந்தார்கள். இது எல்லா உறவுகளிலும் நடக்கும் ஒரு விஷயம்தான். இறுதியாக 2000 ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார் சுந்தர் சி.