கவுண்டமணி காமெடி பாத்துவிட்டு மத்தவங்க காமெடி பாத்தா சிரிப்பே வரமாட்டேங்குது- ஓப்பனாக பேசிய முன்னணி நடிகர்!

By vinoth on ஜூலை 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

   

அந்த கூட்டணி அதன் பிறகு வெற்றிகரமாக வலம் வந்து 2000களின் தொடக்கம் வரை வெற்றிகரமாக சென்றது. ஒரு கட்டத்தில் கவுண்டமணி உடல்நலக் குறைவு காரணமாக நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

   

கவுண்டமணியின் அடாவடியான நடிப்புக்கு திரைப்பட உலகுக்குள்ளேயே அதிகளவில் ரசிகர்கள் உண்டு. சத்யராஜ், கார்த்தி, ராமராஜன் ஆகியோர் பல பேட்டிகளில் கவுண்டமணியோடு நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஜய் சேதுபதி தனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிதான் என்று பேசியுள்ளார்.

 

அதில் “கவுண்டமணியின் காமெடிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்களின் காமெடியைப் பார்த்தால் சிரிப்பு வருவதில்லை. அவரோடு நடித்தவர்கள் எல்லாம் எப்படிதான் சிரிப்பை அடக்கிக்கொண்டு நடித்தார்களோ தெரியவில்லை. அவர்கள் எல்லோருமே கண்டிப்பாக சிறந்த நடிகர்கள்தான். அவர் எல்லா படத்திலும் ஏதேனும் பாடல் பாடுவார். அந்த காட்சியே நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.’ என்று மனம்திறந்து பேசியுள்ளார். இத்தனைக்கும் விஜய் சேதுபதி கவுண்டமணியோடு ஒரு படம் கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.