தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றால் நமக்கு உடனே நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் ஆன்ட்ரியா, வினய், ஹன்சிகா மோத்வானி, சந்தானம், லட்சுமி ராய் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் அரண்மனை. இதன் வெற்றியை தொடர்ந்து த்ரிஷா, சித்தார்த், சூரி, சுந்தர் சி நடிக்க இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் சூப்பர்ஹிட் ஆனது.

Aranmanai series

Aranmanai 3
சுந்தர் சி, ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா நடிப்பில் மூன்றாம் பாகமும் வெளியாகி ஹிட் ஆனது, இதை தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் கேக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தநிலையில், அரண்மனை நான்காம் பாகமும் தயாராகிவிட்டது. அரண்மனை பட சீரிஸில் எப்போதும் இரண்டு ஹீரோக்கள் இருப்பார்கள். சுந்தர் சி இருப்பார், அவருடன் வினய், சித்தார்த், ஆர்யா வந்தார்கள். ஆனால் இந்த் முறை சுந்தர் சி மட்டும் தான்.

Sundar c about vijay sethupathi rejecting aranmanai
இதுகுறித்து சுந்தர் சி கூறும்போது, நான் இதில் நடிப்பதாகவே இல்லை, விஜய் சேதுபதி தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், கடைசி நிமிஷத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. விஜய் சேதுபதி, நிறைய படங்களில் நடித்து வந்தார், டேட்ஸ் சரியாக அமையவில்லை அதனால் தான் இதில் அவரால் நடிக்க முடியவில்லை. கடைசி நிமிடம் ஹீரோ இனி தேட முடியாது என்பதால் நானே நடித்தேன் என கூறியுள்ளார் சுந்தர் சி
