நான் எடுக்கிற பேய் படங்களில் நடிகைகளை கிளாமராக காட்ட இதான் காரணம்.. ஓப்பனாக பேசிய இயக்குனர் சுந்தர்.சி..!!

By Priya Ram on ஏப்ரல் 1, 2024

Spread the love

கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீசான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனர் சுந்தர்.சி திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளுக்கு இன்று மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

   

இதனை அடுத்து சுந்தர்.சி இயக்கிய முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, நாம் இருவர் நமக்கு இருவர், அருணாச்சலம், மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. சுந்தர்.சி இயக்கிய படங்கள் காமெடி கலந்த மசாலா காட்சி நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். கலகலப்பு படத்திலும் சுந்தர்.சி முழுக்க முழுக்க காமெடி காட்சிகளாக கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

   

 

இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களும் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சுந்தர்.சி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் உலக அளவில் பேய் படம் என்றாலே ஹாரர் தான் இருக்கும். ஆனால் உங்கள் படத்தில் மட்டும் நடிகைகளை கிளாமராக காட்டுகிறீர்கள் ஒரு பேய் படத்தில் நடிகைகளை இப்படி காட்ட நினைத்தது எப்படி என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சுந்தர்.சி பேய் படம் என்றாலே பழைய கட்டிடம், இருட்டு மக்களை பயமுறுத்தும் முகம் தான் இடம்பெற்றிருக்கும். நான் ஏன் பிரமாண்ட செட்டில் படத்தை எடுக்கக் கூடாது என நினைத்தேன். பேய் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமா அழகாவும் இருக்கலாமே என்று நினைத்தேன். அதுதான் எனது பேய் படங்கள் அப்படி இருக்க காரணம் என்ன பதில் அளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ABP Nadu (@abpnadu)