முன்னணி நடிகையாக வலம் வந்து ஜெனிலியா பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தோஷ் சுப்பிரமணியன், விஜயுடன் சச்சின், தனுஷுடன் உத்தமபுத்திரன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெனிலியாவும் பாலிவுட் நடிகரான ரித்தேஷ் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ரியான், ரஹீம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஜெனிலியா-ரித்தேஷ் தம்பதியினரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் ஜெனிலியா தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram