Categories: சினிமா

அந்த நிறுவனம் ஏற்கனவே எடுத்த, அதே கதையை திரும்பவும் எடுத்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் சுந்தர் C.. அவரே சொன்ன சீக்ரெட்..

Spread the love

இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி தொடர்ந்து தற்போது அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதில் மும்முரம் செலுத்தி வருகிறார். பல நேர்காணல்களில் அவர் தான் இயக்கிய படங்கள் குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸியமான விசயங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்வார். அந்த வகையில், கலகலப்பு படம் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு சந்தானம், விமல், மிர்ச்சி சிவா உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கலகலப்பு.

#image_title

இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ஓவியாவும் நடித்திருந்தனர். பரம்பரை பரம்பரையாக நடத்தி வந்த ஹோட்டல், விமலின் கையில் வர, திருட்டு தம்பியை வைத்துக் கொண்டு பழங்கால சமையலைக் கொண்டு ஹோட்டலை எப்படி மீட்டெடுக்கிறார் விமல் என்பது தான் கதை. அத்தோடு கிராமத்தில் செல்வாக்கோடு இருக்கும் அஞ்சலியின் முறைமாமன் சந்தானத்திடம் இருந்து அஞ்சலியை மீட்டு கொண்டு வந்து திருமணம் செய்து கொள்வது,

#image_title

மிர்ச்சி சிவா ஜெயிலில் இருந்து தான் வந்தார் என்பதை தெரிந்து கொண்ட ஓவியா, தன்னை வெறுத்து விடுவாரோ என்ற பயத்தில் வீட்டை விட்டு செல்லும் மிர்ச்சி சிவா, ஒரு கட்டத்தில் போலீஸ்காரருடன் சூதாடி ஹோட்டலை இழந்து நிற்க, மறுபுறம், செல்போனுக்குள் 20 வைர கற்களை பதுக்கி வைத்து அதனை ஒரு கட்டத்தில் மிர்ச்சி சிவாவிடம் கை மாற, அதனை பிடிக்க வரும் ஒரு கும்பல் என நகைச்சுவையாக செல்லும் இப்படம்.

#image_title

இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒரு கட்டத்தில் நகராமலேயே இருந்தப் போது, டெல்லி பெல்லி என பாலிவுட்டில் வெளியான படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து இப்படத்தில் இணைத்ததாக சுந்தர்.சி கூறியிருக்கிறார். யு டிவி ப்ரொடக்‌ஷன் சார்பில் ஒரு படத்தை இயக்கும் படி சுந்தர்.சியிடம் வர, அவரும் கலகலப்பு படத்தை அந்த கம்பெனிக்கு இயக்கி கொடுக்கிறார். ஆனால் பாலிவுட்டில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தயாரிப்பும் அதே கம்பெனி தான்.

#image_title

கலகலப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கும் போது, தயாரிப்பாளர் தனஞ்செயன் பணம் கொடுக்க வருவதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் அவர்கள் எடுக்க இருக்கும் காட்சி அப்படியே டெல்லி பெல்லி படத்தின் கிளைமேக்ஸ் போன்று தான் எழுதியிருக்கிறார் சுந்தர்.சி. இது நினைவுக்கு வர, இளவரசுக்கு கெட்டப் மாற்றி, சிவாவின் நகைச்சுவை கலந்து, அப்போதைக்கு படத்தின் கிளைமேக்ஸ் மாற்றியமைக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

#image_title

Archana

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

20 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago