சன் டிவியில் சக்கை போடு போடும் டாப் 5 சீரியல்கள்.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்..!

By Nanthini on அக்டோபர் 1, 2024

Spread the love

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய சேனல் தான் சன் டிவி. எத்தனை சேனல்கள் வந்தாலும் சன் டிவிக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. மக்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதன்படி தற்போது சன் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இந்த ஐந்து சீரியல்கள் உள்ளன.

   

அதில் மல்லி என்ற சீரியல் மூலம் விஜய், வெண்பா மற்றும் மல்லி மூவரும் மக்கள் மனதில் பதிந்து விட்டார்கள். தற்போது சீரியலில் வெண்பாவை அழைத்துச் செல்ல கதிரேசன் வந்த நிலையில் மல்லி அதிரடியாக முடிவை எடுத்து வெண்பாவை கொடுக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் மல்லி பேசிய பேச்சில் தலைதரித்து கதிரேசன் ஓடிவிட்டார். வெண்பா மற்றும் விஜயை சேர்க்கும் வகையில் அடுத்த ஆட்டத்தை மல்லி ஆரம்பிக்க உள்ளார்.

   

 

அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியல் மூலம் நந்தினி மற்றும் சூர்யாவின் கெமிஸ்ட்ரி மக்களை கவர்ந்துள்ளது. தற்போது சூர்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதியாக நந்தினியை தான் சூர்யா திருமணம் செய்ய உள்ளார். அந்த ஒரு காட்சிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்து கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவின் கல்யாண வேலைகள் எல்லாம் கைக்கு மீறிய செலவுகளை இழுத்துக் கொண்டே செல்வதால் ஆதிரை என்ன சொன்னாலும் அதை செய்யும் மிக்க தான சூழ்நிலையில் பிரபு உள்ளார். பிரபுவை பொறுத்தவரை எப்படியாவது ஆதிரையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார். கல்யாணத்தை நிறுத்த மற்றொரு பக்கம் சதி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக கயல் சீரியலில் கயல் மற்றும் எழில் திருமணம் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த இந்த தருணத்தில் கயலை கடத்திக் கொண்டு போய் பல குழப்பங்களை செய்து வரும் சிவசங்கரி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் வகையில் எழில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகேஷ் ஆனந்திக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்று நினைத்து ஆனந்தியை விட்டு அன்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்லும் நிலையில் இப்போது என்னதான் ஆனந்தி அன்புவை இணைத்து வருத்தப்பட்டாலும் மனதிற்குள் ஒரு காதல் உணர்வை ஏற்படப் போகின்றது. இதனை அவர் வெளியே சொல்லாமல் தவிக்கும் நிலையில் மகேஷ் இவர்களுடைய காதலை புரிந்து கொண்டு அன்பு ஆனந்தியை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

author avatar
Nanthini