பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி இளைஞர்களிடையே பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் பார்சல் வாசன்மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் போஸ்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தை செல்அம் இயக்கினார். படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் நாட்கள் மட்டும் முடிவடைந்த நிலையில் இயக்குனர் டிடிஎஃப் வாசனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் கூறினார். இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் செல்அம் கூறியதாவது, மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து தம்பி டிடிஎஃப் வாசன் முழுமையாக நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
புதிய கதாநாயகனையும் படத்தின் புதிய லுக்கையும் வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பத்திரிகையாளரிடம் அறிமுகப்படுத்துகிறேன். சூழ்நிலை சரியில்லை. எனக்கு டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்துக்காக எங்களுடனே பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவருக்கு வேறு சில வேலைகள் இருப்பதால் அவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை. அவர கைது செய்ததெல்லாம் காரணம் கிடையாது.
படத்தோட பூஜை போட்டாச்சு. ஹீரோ போஷனை தவிர வில்லன் போர்ஷன், ஹீரோவோட அம்மா போஷன் எல்லாத்தையும் எடுத்துட்டோம். ஹீரோவா வச்சு மட்டும் தான் படம் எடுக்கணும் புதிய ஹீரோ செலக்ட் ஆன பிறகு அதையும் எடுத்து முடிச்சிட்டா படம் உடனே ரிலீஸ் ஆகும். இப்பவும் அதான் சொல்றேன். தம்பி தான் அடுத்த சூப்பர் ஸ்டார். அதை நான் மாத்தி சொல்லல. என்னுடைய சூழ்நிலைகளுக்கு அவர் ஒத்து வரல. அதனால படத்துல இருந்து நீக்குகிறோம். ஒரு சில சூழ்நிலைகளால் அவரை நீக்குறோம் என ஓப்பனாக பேசி உள்ளார்.