தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரூபினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார். இவர் அமிதாபச்சனின் மிலி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு தென்னிந்திய படங்களில் நடிப்பதற்காக சென்னையில் குடியேறினார். 1987 ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மனிதன், ராஜா சின்ன ரோஜா, என்ன பெத்த ராசா மற்றும் அபூர்வ சகோதரர்கள் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த ரூபினி தனது உறவினர் மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அனிஷா ராயன் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு ரூபிணி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது குழந்தைகளுக்கான ஒரு பவுண்டேஷன் வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய கணவர் பாரதிய ஜனதா கட்சியின் சமூக என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.