#image_title
இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் சிறு வயது குழந்தை யார் என்று தெரிகின்றதா? அதை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
தெலுங்கில் 2019 வெளிவந்த அந்தாரி பந்துவயா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. இந்த படத்தை இயக்குனர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சர்வானந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக பத்மப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் பிரியங்கா நல்காரி. இதுதான் இவர் அறிமுகமான முதல் படமாகும்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் திலீபன் நான் சாமி ரங்கா, ராமின், ஹைப்பர் ரானா ரகுபதியுடன் நேனே ராஜு நேனே மந்திரி என அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இ டிவியில் ஒளிபரப்பான மேகமாலா மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான சரவண சமீராலே என்ற சீரியலில் நடித்து வந்தார்.
சீரியலின் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றிருந்த இவர் தொடர்ந்து தமிழில் அறிமுகமானார். அப்படி இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் காஞ்சனா 3. நடிகர் லாரன்ஸ் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கால் பதித்த பிரியங்கா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்தார்.
இந்த சீரியல் மூலமாக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் கிடைத்தது. இந்த சீரியலில் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து அகத்தியிருப்பார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீதாராம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரை மலேசியாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது பிரேக் எடுத்துக்கொண்ட அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
பின்னர் மீண்டும் ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட நல தமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் தற்போது தான் முடிவு அடைந்தது. அதற்கு காரணம் கூட இவர்தான் என்று பலரும் கூறி வந்தார்கள். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரியங்கா தனது கணவருடன் சேர்ந்து மலேசியாவில் புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கின்றார். இந்நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தனது அம்மாவுடன் இருக்கும் இவரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம்…
கர்நாடக மாநிலம் பெலாமக்கியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கல்லூரி…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு…
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஜெகதீஷ், 2023-ல் தைவானுக்குத் தனது முனைவர் பட்டப்படிப்பிற்காகச் சென்றபோது, டேட்டிங் செயலி வழியாக ஜோயிங்யிங்…
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 19 வயதான சுமித்ரா என்ற இளம்பெண், மாதவிடாய் காலங்களில்…
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…