திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஜெகதீஷ், 2023-ல் தைவானுக்குத் தனது முனைவர் பட்டப்படிப்பிற்காகச் சென்றபோது, டேட்டிங் செயலி வழியாக ஜோயிங்யிங் என்ற தைவான் நாட்டுப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. படிப்பை முடித்ததும் திருமணம் செய்துகொள்வதாக ஜெகதீஷ் அளித்த வாக்குறுதியை நம்பி, அப்பெண் அவரது கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை முழுமையாக ஏற்று அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் சொந்த ஊர் திரும்பிய ஜெகதீஷ், பெற்றோரிடம் சம்மதம் பெற்றுவிட்டு மீண்டும் வந்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறிச் சென்றவர், கடந்த ஐந்து மாதங்களாக அந்தப் பெண்ணுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்து அவரை ஏமாற்றியுள்ளார்.
ஜெகதீஷைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த ஜோயிங்யிங், உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெளிநாட்டுப் பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…