தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு தான் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. ஏனென்றால் மற்ற சேனல்களுடன் ஒப்பிடும்போது சன் டிவியில் தான் மக்களை கவரும் வகையில் காலத்திற்கு ஏற்றவாறு புது புது கதை களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சியாக இருந்து வருகின்றது. புத்தம் புது படங்கள் மற்றும் விதவிதமான சீரியல்கள் என ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து விடுகிறது. விஜய் மற்றும் ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பினாலும் சன் டிவியை அடித்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் நிறைய பழைய சீரியல்கள் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது அப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் தான் நந்தினி. சுமார் 977 எபிசோடுகள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பான இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நித்யா ராம், ராகுல் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த நந்தினி சீரியல் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள் முதல் இந்த சீரியல் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
