சிறிய பட்ஜெட்டில் அதிக வசூல்.. பெரிய இயக்குனர்களை வீழ்த்தி வெற்றிபெற்ற 5 இளம் இயக்குனர்கள்.. !

By Nanthini on ஆனி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்களும் அடங்கும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்களும் அடங்கும். ஆனால் சமீப காலமாகவே சிறிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. அதே சமயம் தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்களின் இளமை தற்போது மோசமாகத்தான் உள்ளது. சாதாரண கதைக்களம் மற்றும் மிக சிறிய பட்ஜெட் என்று இளம் இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய பட்ஜெட், முன்னணியின் நடிகர்கள் மற்றும் ஏராளமான விளம்பரங்கள் என இறங்கியும் பெரிய இயக்குனர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்கள் இமேஜை அசைத்து பார்த்த ஐந்து இயக்குனர்களின் வெற்றி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Love Today Review: செல்போனால் காதலுக்கு வரும் சிக்கல்... இது 2K கிட்ஸின் ரகளையான லவ் ஸ்டோரி! | Love Today is a promising take on Modern Day love and its conflicts - Vikatan

   

லவ் டுடே:

   

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் லவ் டுடே. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் பெரும் ஐந்து கோடி தான். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சத்யராஜ் மற்றும் ராதிகாவை தாண்டி இந்த படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை. இரண்டு காதலர்களுக்கு இடையே நடக்கும் எதார்த்தமான பிரச்சனையை கொண்டு படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்திருந்தது.

 

லப்பர் பந்து சினிமா விமர்சனம் (Lubber Pandhu movie review) : லப்பர் பந்து தேர்ந்த நடிகர்கள், புத்துணர்ச்சியூட்டும் கதைக்களம், நுட்பமான திரைக்கதையால் ...

லப்பர் பந்து:

கடந்த 2024 ஆம் ஆண்டு ரிலீசான இந்த திரைப்படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். அறிமுக இயக்குனரான இவர் இந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று விட்டார். நடுத்தர வயதில் இருக்கும் கணவன் மனைவி மற்றும் இளம் காதலர்கள் என இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ பிரச்சனையை கொண்டு படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் பெரிய ஹிட் அடித்தது.

குட் நைட் Review: குறட்டையின் சிக்கலை பேசும் ஒரு ஃபீல்குட் படைப்பு | Good Night Movie Review - hindutamil.in

குட் நைட்:

விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த திரைப்படம் தான் குட் நைட். நடுத்தர வர்க்கத்தில் நடக்கும் எதார்த்தமான வாழ்வியலை அழகாக எடுத்துச் சொன்ன இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது மட்டுமல்லாமல் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி வரை வசூல் செய்திருந்தது.

சீனாவில் அதிக வசூல் ஈட்டிய இந்திய படமானது மகாராஜா! | Maharaja is the highest grossing Indian film in China - hindutamil.in

மகாராஜா:

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 190 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

திரை விமர்சனம்: டூரிஸ்ட் ஃபேமிலி | Tourist Family Movie Review - hindutamil.in

டூரிஸ்ட் ஃபேமிலி:

இயக்குனர் அபிஷன் ஜிவித் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 94 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.