தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. நாள் ஒன்றுக்கு 15க்கும் மேற்பட்ட சீரியல் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. காலை தொடங்கிய இரவு வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றன.
அதிலும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்களது வேலை பளு தெரியாமல் இருப்பதற்காக சீரியல்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். மதிய நேரங்கள், பிரைம் டைம் சீரியல் என ஏகப்பட்ட சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. அப்படி திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அருவி.
இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகின்றது. அக்டோபர் 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. இந்த தொடரில் லிவிங்ஸ்டன் அவர்களின் மூத்த மகளான ஜோவிதா, கார்த்திக் வாசு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருவி சீரியலின் கதை முழுவதும் ஜோவிதாவை சுற்றி நடக்கும்.
அவரை ஏற்றுக் கொள்ளாத மாமியார் வீட்டில் இருக்கும் நபர்கள் யாரையும் அவரிடம் பேச விடாமல் தடுக்கின்றார். அருவியும் மாமியாருடன் சண்டை போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு கார்த்திக் தவிக்கின்றார். அம்மாவுக்கு ஆதரவாகவும் இல்லாமல் மனைவிக்கும் ஆதரவாகவும் இல்லாமல் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ஒரு குடும்ப கதை தான் அருவி.
இந்த கதை தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் கூடிய விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. ஏனென்றால் அடுத்தடுத்து வாரணம் ஆயிரம், மல்லி உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.