4 வருட பயணம்.. இந்த வாரத்தோடு முடிவடையும் சன் டிவி சீரியல்.. சோகத்தில் ரசிகர்கள்..

By Mahalakshmi on ஏப்ரல் 22, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.சன் டிவியில் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டாப் 5 இடங்களில் நான்கு இடத்தை சன் டிவி சீரியல்களை பிடித்து விடும் அந்த அளவுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

   

எதிர்நீச்சல்,இனியா,ஆனந்த ராகம்,வானத்தைப்போல போன்ற சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அன்பே வா கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த சீரியல்.

   

 

இந்த வாரத்தோடு நிறைவு பெறுகின்றது.இந்த சீரியலில் விராட் என்பவர் வருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் முடிய உள்ளது.இந்த தொடரின் கிளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ளது.இது அந்த சீரியல் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.