பாலு மகேந்திராவுக்கும் ஷோபாவுக்கும் இருந்த உறவை என் மனைவி முதல் சந்திப்பிலேயே கண்டுபிடித்துவிட்டார்… எழுத்தாளர் சுஜாதா பகிர்ந்த சம்பவம்!

By vinoth on செப்டம்பர் 18, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் மிக சிறிய காலமே ஒளிவீசிய வால்நட்சத்திரம் ஷோபா. ஷோபா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான போது அவரது வயது 15. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தபோது வயது 18. அவரின் மறைவு ரசிகர்களை மட்டும் இல்லாமல் அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரையே பெருமளவில் பாதித்ததாம். அந்தளவுக்கு தமிழக மக்களை தனது நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா. அதன் பின்னர் ஷோபா அவரது படங்களில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ரகசியத் திருமணம் செய்துகொண்டனர்.

   

balu mahendra and shoba

   

ஷோபாவும் பாலு மகேந்திராவும் இலங்கையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இயல்பாகவே நல்ல நெருக்கம் இருந்துள்ளது. ஆனால் அவர்களின் வயது வித்தியாசத்தால் அதை யாரும் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கேற்றார் போல ஷோபாவும் பாலு மகேந்திராவை அங்கிள் அங்கிள் என்றுதான் அழைத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் பாலு மகேந்திராவுடன் நெருங்கிய நட்பில் இருந்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் திருமணம் மற்றும் ஷோபாவின் மறைவு பற்றி தன்னுடைய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் “நானும் என் மனைவி சுஜாதாவும் ஒருமுறை பாலு மகேந்திரா வீட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது ஷோபா அங்கிருந்தார். அவர் பாலு மகேந்திராவை அங்கிள் அங்கிள் என்று ஆசையோடு அழைத்துப் பேசினார்.

sujathas

நாங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் என் மனைவி இது வெறும் அங்கிள் உறவு இல்லை. அவர்களுக்குள் வேறு என்னமோ உள்ளது என்றார். அவர் சொன்னது போலவே அடுத்த சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் ஷோபா தற்கொலை செய்து கொண்டதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதற்கானக் காரணம் பற்றி பாலு மகேந்திரா என்னிடம் பகிர்ந்துள்ளார். ஆனால் அதை நான் பொதுவில் சொல்ல முடியாது” எனப் பகிர்ந்துள்ளார்.