சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் செல்வம் முத்துவிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு மொய் பணத்தை கொண்டு வந்து இதை முதலில் தங்கச்சி மீனா கிட்ட கொண்டு கொடு என்று கொடுக்கிறான். இதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
ரோகிணியும் வித்யாவும் அவரை மிரட்டும் நபரை போய் சந்திக்கின்றனர். அவனோ எனக்கு மொத்தமா ஒரு பணத்தை கொடுத்திடு இனிமேல் உன் பக்கமே வரமாட்டேன் என்று சொல்கிறான். அப்படி பணம் தரவில்லை என்றால் நான் உன்னை பற்றி உண்மையை போய் வெளியே கூறி விடுவேன் என்று சொல்கிறான். உடனே ரோகிணி இவனுக்கு ஒரு முடிவை ஏதாவது கட்டணம் என்று யோசிக்கிறாள்.
அடுத்ததாக மீனா தனது வீட்டிற்கு சென்று அம்மாவை பார்க்கிறாள். சத்யா எங்கே என்று கேட்கிறாள். உடனே மீனாவின் அம்மா அழுது கொண்டு சத்யா வர வர சரியில்லடி சேராத சேர்க்க கூட சேர்ந்துக்கிட்டு கெட்ட பழக்கமா படிக்கிறான். எங்கேயாவது சொல்லாம கொள்ளாம போயிடறான் அப்படின்னு சொல்கிறார். உடனே மீனா கோபப்பட்டு இதுக்கெல்லாம் அந்த ரவுடி அவன் தான் காரணம் நான் அவனை போய் உண்டு இல்லைன்னு பண்றேன் என்று அந்த ரவுடியை தேடி அவனது ஆபிசுக்கு செல்கிறாள்.
அங்கு தலையில் கட்டு போட்டு விடுகிறார்கள். டாக்டர் பயப்படுவதற்கெல்லாம் ஒன்றுமில்லை. இருந்தாலும் தலையில் அடிபட்டதனால கொஞ்சம் ஸ்கேன் எடுத்து பார்த்திடலாம் அப்படின்னு சொல்றாங்க. ஸ்கேன் எடுக்க மீனாவை அனுப்பிவிட்டு மீனாவின் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி நடந்ததெல்லாம் முத்து சொல்கிறார். நல்ல நேரம் அத்தை நீங்க மீனா அங்க ரவுடியை பார்க்க போயிருக்கான்னு எனக்கு போன் பண்ணீங்க நான் போறேன் இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு என்று சொல்கிறான். உடனே மீனாவின் அம்மா அழுதுகொண்டு நீங்க எந்த ஹாஸ்பிடல் சொல்லுங்க மாப்பிள நான் வந்து பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு என்று சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.