நம் வாழ்க்கையில் அனைவரும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்திருப்போம். அதீத கஷ்டங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருந்தால் அதற்கு ஜோதிட சாஸ்திரப்படி சனி திசை, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்ட சனி போன்ற ஏதாவது சனியின் பிடி இருக்கலாம் என்று கூறுவார்கள். அப்படி ஒருவருக்கு சனி திசை நடந்து கொண்டிருந்தால் அவர்களின் கர்ம வினைப்படி பல இன்னல்களை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் ஒரு சில பரிகாரங்கள் ஸ்தலங்களை சென்று நாம் வணங்கும்போது சனி பகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி சனி பகவானால் ஒருவருக்கு கஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தால், திருநள்ளாறு ஸ்தலத்தை சென்று தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சனி தோஷம் நீங்கி சனி திசை விலக வேண்டும் என்றால் திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை தரிசிக்க வேண்டும். இந்த கோவிலில் அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று எல்லா துன்பங்களையும் சனி பகவான் போக்குவதாகவும் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் தருவார் என்பது நம்பிக்கை.
திருநள்ளாறு ஸ்தலத்திற்கு பின்னால் ஒரு புராண கதையும் இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு முறை சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி ஏழரை ஆண்டு சனிபிடித்து எல்லா துன்பங்களையும் அனுபவித்து வந்தார். அந்தசமயத்தில் மனைவியையும் குழந்தையும் விட்டுவிட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழந்தார் நளன். இறுதியாக அயோத்திய அரசிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள். நள மகாராஜனின் இந்த பாவம் நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டாராம். உடனே அந்த சனியின் பிடியிலிருந்து நளன் விடுவிக்கப்பட்டாராம்.
அப்போது சனீஸ்வர பகவான் நலனுக்கு வரம் அளித்திருக்கிறார். யாரெல்லாம் சனி திசையால் வாடும்போது என்னை வந்து திருநள்ளாரில் தரிசிக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை போக்கி அருள் பாலிப்பேன் என்றும் மேலும் நளனிடம் நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு இந்த நளத்தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் நீக்கப்படும் என்று வரம் அளித்திருக்கிறார்.
சனீஸ்வர பகவானின் வரத்தின் படி நளனும் நாள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி தனது வாழ்நாள் முழுவதும் இறை பணி செய்து வந்தார் என்பது வரலாறு. திருநள்ளாறு தளத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வரன் பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இப்படியாக நளனுக்கு வாழ்க்கையில் இந்த ஸ்தலத்தினால் திருப்பம் ஏற்பட்டதால் அதேபோல் நாமும் கஷ்டத்தின் போது திருநள்ளாறு ஸ்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்தால் கண்டிப்பாக திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம்.