#image_title
தமிழ் சினிமாவில் உள்ள ரசிகர்கள் அனைவரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர் சுஜாதா. திரைத்துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1935 ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி பிறந்த இவரின் உண்மையான பெயர் ரங்கராஜன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் படித்த இவர் அரசு பணியில் சேர்ந்தார்.
இருப்பினும் எழுத்து மீது இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுத தொடங்கினார். ரங்கராஜன் என ஏற்கனவே ஒரு எழுத்தாளர் இருப்பதால் தனது மனைவியின் பெயரான சுஜாதா என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுத தொடங்கிய இவர் ஒரு கட்டத்தில் எழுதாத பத்திரிகைகளை இல்லை என்ற நிலை உருவானது, பின்னர் தனது பயணம் பத்திரிகையோடு மட்டும் நின்றுவிடாமல் திரை துறையிலும் கால் பதிக்க தொடங்கினார்.
இவரின் பல நாவல்களைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டது. எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் என வலம் வந்த சுஜாதா மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலமாக வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் வசனங்களை எழுதி இருக்கின்றார். அப்படி அவர் வசனம் எழுதிய படங்கள் முதல்வன், இந்தியன், திருடா திருடா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, அன்னியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என பல ஹிட் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கின்றார்.
குறிப்பாக முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கும் ரகுவரனுக்கும் நடக்கும் பேட்டி காட்சி இன்று வரைக்கும் பிரம்மிப்பை கொடுக்கக் கூடியது. இப்படி தனது வசனத்தால் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டிருந்த சுஜாதா இந்தியன் திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பார். அதில் இந்தியன் தாத்தாவாக வரும் கமலஹாசன் தனது மகன் லஞ்சம் வாங்குகிறார் என்பதை தெரிந்து உடனே அவரை கொலை செய்வதற்கு கூட தயங்காமல் இருப்பார்.
பெற்ற மகனை தந்தை கொல்ல போகிறார் பெற்ற மகனை தந்தை கொல்ல போகிறார் என்பதை தனது வசனத்தால் மிகச் சிறப்பாக கூறியிருப்பார். “கல்யாணம் ஆகி ரொம்ப நாள் கழிச்சு பொறந்த குழந்தை என்பதனால அவ மேல எனக்கு பாசம் அதிகம். அவனுக்கு முத்தம் கொடுக்கும்போது மீசை குத்திடும்னு இப்ப வரைக்கும் மீசை வைக்காம இருக்கும் சேனாதிபதி. ஆனா இப்ப அவனையே இழக்க தயாரா இருக்கேன். உன்னை விட எனக்கு தான் இழப்பு ஜாஸ்தி” என கமல்ஹாசன் கூறும் வசனம் மிகச் சிறப்பாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…