#image_title
நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவிக்கு மூன்றாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை சிவகார்த்திகேயன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், எதிர்நீச்சல் உள்ளிட கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
நடிகராக மட்டுமே இல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கின்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும், அதைத் தொடர்ந்து சுதா கொங்குரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படி சினிமாவில் பிஸியாக வலம் வரும் சிவகார்த்திகேயன் வீட்டில் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி நடந்திருக்கின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆராதனா மற்றும் குகன் என்கின்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தது, இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது.
இந்த செய்தியை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பதாவது “நேற்று இரவு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறேன், நன்றி” என கூறி இருக்கின்றார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…