#image_title
தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை தனிஷா முகர்ஜியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் 2007 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் உன்னாலே உன்னாலே.
இந்த திரைப்படத்தில் நடிகர் வினய் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சதா மற்றும் தனிஷா முகர்ஜி நடித்திருப்பார். இவர் பிரபல பாலிவுட் நடிகையான கஜோலின் தங்கை ஆவார். 1978 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் ஹிந்தியில் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சுனில் செட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.
இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராத காரணத்தினால் முன்னணி ஹீரோயினியாக ஜொலிக்க முடியவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தனுஷா சின்னத்திரைக்கு தாவினர். 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசையும் வென்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 47 வயதான அர்மின் கோலி என்பவரை அவர் காதலித்து வருவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எதுவும் பேசாமல் இருந்த இவர் பின்னர் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகின.
ஆனால் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் என்டர்டைன்மென்ட் ஈ என்கின்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்று இருந்தார். தற்போது தனது தாயுடன் இருந்து வரும் நடிகை தனிஷா தனது தாயுடன் நேரம் செலவிட்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…