தான் இயக்கிய முதல் படத்தின் பெண் தயாரிப்பாளர்… அவரது இழப்பிற்கு உருக்கமாக பதிவிட்ட சுதா கொங்கரா…

By admin on தை 21, 2025

Spread the love

சுதா கொங்கரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றம் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட ஆசிரியர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரையுலகில் நன்கு அறியப்பட்டவர். ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த சுதா கொங்கராவிற்கு சிறுவயதில் இருந்தே இயக்கத்தில் ஆர்வம் வந்தது. 2019 ஆம் ஆண்டு தமிழில் துரோகி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

   

அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த படத்தை எடுத்த விதம் மற்றும் கதை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து SK25 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.

   

 

இந்நிலையில் சுதா கொங்கராவின் நீண்ட நாள் தோழி மற்றும் அவரது முதல் படத்தின் தயாரிப்பாளர் ஆன மனோ அக்கினேனி என்பவர் உயிர் ந்திருக்கிறார். அவருக்காக சுதா கொங்கரா உருக்கமாக ஒரு செய்தியை எழுதி பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் என்னுடைய நெருங்கிய தோழி மற்றும் முதல் தயாரிப்பாளர் என்னுடைய எல்லா தவறுகளையும் இயக்கத்தையும் கூடவே இருந்து பார்த்தவர். என்னுடைய படைப்புகளை முதல் பார்வையாளராக இருந்து கவனித்து பாராட்டியவர். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என்னுடைய படங்களை எல்லாம் உனக்கு டெடிகேட் செய்கிறேன் என்று உருக்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார் சுதா கொங்கரா.