ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென பேக்கப் சொன்ன எம்ஜிஆர்.. பதறிப் போன பெண்கள்.. சீக்ரெட்டை உடைத்த நடிகை லட்சுமி..!

By Nanthini on தை 21, 2025

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

எம்ஜிஆர் 100 | 98 - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! | எம்ஜிஆர் 100 | 98  - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! - hindutamil.in

   

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜிஆர்  ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். எம்ஜிஆர் என்றால் உதவும் குணம் ஒன்று என்றால் தைரியம் மற்றொன்று குணம். இந்த நிலையில் எம்ஜிஆர் குறித்து நடிகை லட்சுமி பேசியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எம்ஜிஆர் பற்றி அவர் பேசுகையில், எம்ஜிஆர் உடன் இதய வீணை என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருந்தபோது அவர் பைனாகுலரில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

   

நடிகைகளை கடத்த வந்த கும்பல்!.. இறங்கி அடித்து ஓடவிட்ட எம்.ஜி.ஆர்!. நடிகை  பகிர்ந்த சம்பவம்!.. | actress lakshmi telling mgr is the real fighter in  shooting spot

 

நான் அவருடைய அருகில் சென்று என்ன சார் அங்கேயே பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்டேன். உடனே அவர் சைகையில் அமைதியாக இரு என்று சொன்னார். பிறகு என்னிடம் எல்லோரும் அங்கே போய் அமருங்கள், ஸ்னாக்ஸ் வருகிறது சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டார். சிறிது நேரம் கழித்து திடீரென்று சூட்டிங் இன்று வேண்டாம் பேக்கப் செய்யுங்கள், பெண்களை எல்லாம் பத்திரமாக அனுப்புங்கள் என்று கூறினார். உடனே நாங்கள் அனைவரும் வேனில் ஏறி அமர்ந்து கொண்டோம். அந்த சமயத்தில் ஒரு கும்பல் பெண்களை கடத்துவதற்காக காரில் வந்தது. ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் எல்லோரும் அவர்களுடன் சண்டை போட்டனர். அவர்களுடன் சேர்ந்து எம்ஜிஆர்யும் களத்தில் இறங்கி சண்டையிட்டார். அத்தனை பேரை அவர் அன்று அடித்ததை நான் என் கண்ணால் பார்த்தேன் என்று படப்பிடிப்பில் நடந்த உண்மை சம்பவத்தை நடிகை லட்சுமி பகிர்ந்துள்ளார்.