சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக ஆகியிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனது விடாமுயற்சி உழைப்பினால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக திருப்புமுனையைப் பெற்றார்.

அதற்கடுத்ததாக கமர்சியல் படங்களில் நடித்தார். வேலைக்காரன் சீமராஜா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, “பராசக்தி படம் இருதி சுற்றை விட 100 மடங்கும், சூரரைப் போற்றுவை விட 50 மடங்கும் அதிகம். நான் மிகவும் விரும்பும் படம் பராசக்தி. அடக்குமுறைக்கு எதிரான கதை என் அரசியலைப் பேசுகிறது” என்று கூறியவர்.
