தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சுமார் 20 வருடங்கள் ஆனது. இந்த 20 வருடங்களும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்திற்காக பயனை தான் தற்போது அருண் விஜய் அனுபவித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது தனுசுடன் இணைந்து இட்லி கடை மற்றும் ரெட்டை தல போன்ற பல படங்களில் நடித்து வரும் அருண் விஜயின் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க சூர்யா கமிட்டான நிலையில் பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அருண் விஜய் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இதுவரையில் ஆக்சன் காட்சிகளில் நடித்து வந்த அருண் விஜய் இந்த திரைப்படத்தில் வாய் பேச முடியாத காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றாலும் படத்தின் கதையில் சில தோய்வு இருந்தது. இந்த படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் இதுவரை மொத்தமாகவே ஒன்பது கோடி தான் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. இதுவரையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மிகவும் மோசமான வசூல் வணங்கான் படத்திற்கு தான் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருந்தாலும் வணங்கான் திரைப்பட வசூல் குறித்து இதுவரை படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர அறிவிப்பையும் வெளியிடவில்லை.
