‘என் வாழ்க்கையில நீ வந்ததுக்கு நன்றி… தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடு’… திடீரென பாவனி குறித்து அமீர் வெளியிட்ட பதிவு வைரல்…

By Begam on கார்த்திகை 9, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் வீட்டிலேயே அமிர் தனது காதலை பாவனியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்தார் பாவனி. நடிகை பாவனி ‘சின்னத்தம்பி’ உட்பட பல   சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் திருமணமான சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தார்.

   

அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவரது  இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது.

   

 

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாவனி. இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து வந்த பாவனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒன்றாகவே காணப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி தங்களது கடின உழைப்பால் டைட்டிலையும் வென்றனர் .தற்பொழுது இவர்கள் வெள்ளி திரையில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் அமீரின் காதலை பாவனி  ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

மேலும் ஒரே வீட்டில் லிவிங்  ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இவர்கள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அமீர். தற்பொழுது இவர் இன்று பிறந்தநாள் காணும் தனது வருங்கால மனைவியும், காதலியுமான பாவனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை உருக்கமாக கூறி , ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் பாவனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Amir A D S (@amir__ads)