மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பிறகு 24ஆம் தேதி ஏற்பட்ட மூச்சுத் திணறால் ராஜீவ்காந்தி அரசு மனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்.
