தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த செப்டம்பர் 23, 2021 அன்று, விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். உழவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு திட்டம் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணை வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதி பிரிவில், மின் இணைப்பைப் பெற ரூ. 10,000, ரூ. 25,000, ரூ. 50,000 என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இதில் 5 குதிரை திறனுள்ள மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ. 2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ. 2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரை திறனுக்கு ரூ. 4 இலட்சம் என மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் விவசாய இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தர்மபுரி, பாலக்கோடு, அரூர், கடந்தூர் ஆகிய கோட்டத்தில் உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரியதிமுறைக்குட்பட்டு, பெயர், சர்வே நம்பர் உட்பிரிவு மாற்றம், சர்வே எண் அல்லது கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
