சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக இளஞ்சிறப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் அவல நிலை காரணத்துக்காகவே, பெண்களின் பாதுகாப்பிற்கு திட்டத்தை முன்னெடுத்து வைத்துள்ளோம் என்று அரசு கூறியுள்ளது. சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பாக பயணத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
பெண்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் தொடங்கியுள்ளதாம் . பின்பு அந்த ஆட்டோக்களில் காவல்துறை உதவி எங்களுடன் இணைக்கப்பட்ட gps-யும் பொருத்தியுள்ளதாம். அவசர காலங்களிலும் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளனர். 2025 , மார்ச் 8ஆம் நாளிலிருந்து இத்திட்டம் துவங்கியுள்ளது. மூன்றாம் கட்டமாக வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்கள் 15.9.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க உரிய தகுதிகள் : 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம், சென்னையில் குடியிருப்பு சான்றிதழ், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிங்காரவேலர் மாளிகை எட்டாவது தளத்தில் செயல்பட உள்ளது. ஆகவே சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் வடக்கு அல்லது தெற்கு என்று முகவரி இட்டு 15/9/2025 தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.
