அதிமுகவுக்கு அமோக வெற்றி… அதிர்ச்சியில் திமுக.. பக்கா பிளான் போட்டு தூக்கும் DMK மேலிடம்…!!

By Soundarya on ஆவணி 29, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநிறுத்த தீவிரமாக  செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார்.

இதற்கான தீவிர பரப்புரையில் EPS இறங்கியுள்ளார். அந்தவகையில் 10,000கி மீ, 100 தொகுதிகள் என EPS தனது 3 கட்ட பரப்புரையை முடித்துள்ளார். மக்களின் கூட்டம், அரசுக்கு எதிரான எடப்பாடியின் பேச்சுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளார்கள். அதிமுகஅணிகள் பிளவு நமக்கு சாதகமாகும் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, அதிமுகவுக்கு கூட்டம் கூடியது சற்று அதிர்ச்சியை தந்துள்ளதாம். இதனால்,சீக்கிரமே புதிய வியூகங்களுடன் களமிறங்க கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.