அருவருப்பா இருக்கே..! ஆர்டர் செய்யப்பட்ட சாண்ட்விச்சிக்குள் கிடந்த பொருள்… மக்களே எச்சரிக்கையா இருங்க..!!

By Srimathi on ஆவணி 29, 2025

Spread the love

நொய்டாவில் உள்ள ஒரு ஆன்லைன் உணவு விநியோக செயலியில் இருந்து, ஆர்டர் செய்யப்பட்ட சாண்ட்விச்சிக்குள் பிளாஸ்டிக் கையுறைகள் காணப்பட்டன. வாடிக்கையாளர் தனது பதிவில் சாண்ட்விச்சில் காய்கறிகள் மற்றும் பிற பொருட்களுடன், ஒரு பிளாஸ்டிக் கையுறை கண்டதாக கூறினார். இதனை தனது சமூக ஊடகதளமான X தலத்தில் பகிர்ந்து, சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறிய தகவலின்படி, அவர் இரண்டு வகையான சாண்ட்விச்சை ஆர்டர் செய்திருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கையுறை வெளியே வந்ததாக எழுதினார். இது ஒரு தீவிரமான விஷயம், விசாரிக்கப்பட வேண்டியது என தெரிவித்தார். இந்த விஷயத்திற்கு, ஆன்லைன் உணவு விநியோக செயலியும், “இந்தப் புகார் மிகவும் ஆச்சரியப்படுவதாக  உள்ளது” என பதில் அளித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் பொழுது, மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியது.