விதியை மீறி நடந்த படப்பிடிப்பு.. கடுப்பான தொழிலாளர்கள் போட்ட கண்டிஷன்.. நிறுத்தப்பட்ட விடாமுயற்சி ஷூட்டிங்.

By admin on மார்கழி 18, 2023

Spread the love

நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஆரவ், அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்கிறார். அஜர்பைஜானில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு, மீண்டும் அஜர்பைஜான் சென்று 2வது ஷெட்யூல் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறது. வரும் ஜனவரி இறுதி வரை இந்த படப்பிடிப்பு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

   

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது அதாவது அஜர்பைஜானில் உள்ள வழக்கப்படி, சட்டப்படி வாரத்தில் 5 நாட்கள் பணி, 2 நாட்கள் விடுமுறை என்பதுதான் அங்குள்ள சட்டம். ஆனால் விடாமுயற்சி படக்குழு விடுமுறையே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இந்த படப்பிடிப்பில், அஜர்பைஜானைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் பணிசெய்து வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை ஏழு நாட்களும், 24 மணி நேரமும் படப்பிடிப்பு என்பது சாதாரணம் என்றாலும், அந்த நாட்டு வழக்கப்படி அது விதிமீறலாகும்.

   

 

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களும் பணிசெய்யாமல் இருந்த நிலையில், அங்குள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டால் கடும் பாதிப்பு, நஷ்டம் ஏற்படும் என தெரிவித்த நிலையில், ஏழு நாட்களுக்கு ஒருமுறை ஒரு நாள் விடுமுறை என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று விடாமுயற்சி படக்குழுவினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. உடனடியாக துபாய் சென்ற அஜீத்குமார் அங்குள்ள தனது வீட்டில் தங்கி ஓய்வெடுத்துள்ளார், மேலும், அவர் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனையும் இன்று செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.