ரஜினியுடன் நடிக்க மறுத்த ஷாருக்கான்.. அதற்கு லோகேஷிடம் அவர் சொன்ன காரணம்..! அந்த கேரக்டர் யாருக்கு கை மாறியது தெரியுமா.? 

By admin on மார்கழி 18, 2023

Spread the love

விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்க தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். வில்லனாக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அடுத்து மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜீவன் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். லியோ படத்தை போல, ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் இந்த படத்தை மிக சிறந்த படமாக தர லோகேஷ் திட்டமிட்டு வருகிறார். குறிப்பாக பான் இந்தியா படமான இதில், மிக முக்கிய நடிகர்கள் நடிக்க வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார்.

   

ரஜினி 171 படத்தின் மீது மட்டுமே தனது கவனம் இருக்க வேண்டும். வேறு எந்த மன குறுக்கீடுகளும் தனக்கு இருக்க கூடாது என முடிவெடுத்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் எடுத்து முடிக்கும் வரை சமூகவலைதள பக்கங்களில் இருந்து முழுவதுமாக விலகுவதாக நேற்றே அறிவித்து விட்டார். பேசுவதற்கு கூட போனை பயன்படுத்த மாட்டேன் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது நணபன் ரத்னக்குமார், கடந்த முறை லியோ படத்தில் அதிக தலையீடு செய்ததாலும், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்ததால், லியோ படத்தை தாறுமாறாக கொண்டு சென்றதையும் உணர்ந்துள்ள லோகேஷ், இந்த முறை ரத்னக்குமாரையும் கழட்டி விட்டுள்ளார். 

   

 

சமீபத்தில் ரஜினி 171 படத்தில் நடிக்க நடிகர் ஷாருக்கானை கேட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். மும்பை சென்ற அவர், நடிகர் ஷாருக்கானை சந்தித்து தனது படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்யுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு ஷாருக்கான், சமீபமாக நிறைய படங்களில் கேமியோ ரோல் செய்துவிட்டேன். அதனால் என் ரசிகர்களுக்கே அது சலிப்பை தந்துவிட்டது. அதனால் சில ஆண்டுகளுக்கு கேமியோ ரோல் வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி மறுத்திருக்கிறார். இதையடுத்து அந்த கேரக்டரில் நடிக்க ரன்வீர் சிங்கிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாக ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.