விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ இந்த சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் .அதோடு மட்டுமின்றி கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீசுக்கென்று , இணையத்தில் கோபி ஆர்மி தொடங்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலின் வெற்றிக்கு நடிகர் சதீஷின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். இவரின் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். கோபியால் ஏமாற்றப்பட்ட பாக்யா தனது குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை காட்டி இல்லத்தரசிகளை குறிப்பாக இந்த சீரியல் வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் கோபி பணம் இல்லாமல் கஷ்டப்படும் விஷயம் ராதிகாவிற்கு தெரிய வைத்துள்ளது. அதேபோல பாக்கியா தனக்கு கிடைத்த அரசு காண்ட்ராக்ட் வேலையில் வந்த பிரச்சினைகளில் அனைத்தையும் சமாளித்து சிறப்பாக செய்து முடித்துள்ளார் . செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினி வந்து தனது சித்து வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார்.

எழில் – அமிர்தா வாழ்க்கையில் ,அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் எனும் புயல் எப்போது வீச போகிறதோ தெரியவில்லை.இப்படி பரபரப்பான கதை களத்துடன் தற்போது இந்த சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியல் தொடங்கி 1000 எபிசோடுகளை கடந்து விட்டதாம். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட சீரியல் ஆனது டிசம்பர் 2023 உடன் 1000 எபிசோடை எட்ட மக்கள் இந்த சீரியல் குழுவினருக்கு தற்பொழுது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram
