மிஷ்கின் படத்தில் நடிக்கவுள்ள ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம்..

By Begam on மார்கழி 18, 2023

Spread the love

சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று எதிர்நீச்சல் சீரியலாகும். இதில் நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர் பட்டாளமே இவருக்கு உருவாகி உள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து தமிழில் எதிரி, டான்சர் ,வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்  மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி  திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார்.

   

#image_title

 

அதே  ஆண்டு கேரளா திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகை விருதும் பெற்றுள்ளார்.தனது இனிய குரலாலும் தமிழில்  பின்னணி பாடகராக பாடியுள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் பல  திரைப்பட நடிகைகளுக்கு  டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் இவர் தற்பொழுது நீண்ட  இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் மீண்டும் கால் பதிக்க உள்ளார்.

அதன்படி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகை கனிகா கமிட்டாகியுள்ளார்.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் இயக்குனர் மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ‘ இயக்குனர் மிஷ்கின் படங்கள் மிகவும் தனித்துவமானவை . அவருடைய அடுத்த படத்தில் இணைவதில் மகிழ்ச்சி ‘ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)